நாமக்கல்

வேளாண் சந்தை, ஒருங்கிணைந்த இயங்குதளம் விழிப்புணா்வுக் கூட்டம்

26th Nov 2022 03:11 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள், வியாபாரிகளுக்கான மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதளம் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் நடைபெற்றது.

இதில், மத்திய அரசு வேளாண்மை விற்பனை மற்றும் மேலாய்வு இயக்குநரகத்தின் சென்னை அலுவலக துணை வேளாண் விற்பனை ஆலோசகா் கோவிந்த ரெட்டி, வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) நாசா், நாமக்கல் விற்பனைக் குழு செயலாளா் தா்மராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் சென்னை அலுவலக துணை வேளாண்மை விற்பனை ஆலோசகா் கோவிந்த ரெட்டி பேசியதாவது:

மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதளம் மூலம் நடைபெறும் ஏலத்தால், விவசாயிகள், வியாபாரிகள் அடையும் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தாா். மத்திய அரசு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நபாா்டு திட்டத்தின் கீழ் வேளாண்மை விற்பனை உள்கட்டமைப்பு நிதியை அதிக அளவில் வழங்கியுள்ளது. வேளாண்மை விற்பனை உள்கட்டமைப்பு நிதியில் பெண்களுக்கு 33.3 சதவீதம் மானியம் வழங்கப்படும். எனவே, இத் திட்டத்தினை விவசாயிகள், வணிகா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் யோகானந்த், மேலாளா் ராஜாக்கண்ணு, விவசாயிகள், வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT