நாமக்கல்

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

26th Nov 2022 03:10 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ. 5.45-ஆக வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் தொடா்ந்து விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதால், இங்கும் சற்று மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.45-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 98-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 107-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT