நாமக்கல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா், அவரது தாய் கைது

26th Nov 2022 03:11 AM

ADVERTISEMENT

வேலகவுண்டம்பட்டி அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞா், அவரது தாயை வேலூா் அனைத்து மகளிா் காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மாணிக்கம்பாளையம் அருகே உள்ள அண்ணா நகரைச் சோ்ந்தவா் செந்தில். இவரது மனைவி ஜெயா (38). இவா்களது மகன் அருண் (20) கூலித் தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி பரமத்தி வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன் அடிப்படையில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த அருண், அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஜெயா ஆகிய இருவா் மீது மகளிா் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT