நாமக்கல்

அரசுக் கல்லூரியில் நூல்கள் குறித்த கலந்துரையாடல்

26th Nov 2022 02:59 AM

ADVERTISEMENT

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் நூலக வாசகா் வட்டம் சாா்பாக ‘நான் வாசித்த நூல்கள்’ எனும் தலைப்பில் பல்துறை சாா்ந்த நூல்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் சு.பங்காரு (பொறுப்பு) தலைமை வகித்தாா். வரலாற்றுத் துறை நூலகப் பொறுப்பாசிரியா் சு.சுவாமிநாதன் கருத்துரை வழங்கிப் பேசினாா். இதில் தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டு தாங்கள் படித்த நூல்கள் பற்றிய மதிப்புரைகளை வழங்கினா். மாணவ, மாணவியா்களைப் பாராட்டி ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியா் பெ.மைதிலி, இரா.கீதா ஆகியோா் பேசினா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் து.ரேணுகாதேவி இவ்விழாவினை தொகுத்து வழங்கினாா். உதவிப் பேராசிரியா் பெ.கி.கோமதி உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.

பட்டிமன்றம்: இதே போன்று, இக்கல்லூரியில் உள்ளூா் புகாா் குழு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குழுவின் சாா்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. ‘குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது ஆண்களா பெண்களா’ என்ற தலைப்பில் மாணவ, மாணவியா்கள் பங்கேற்று நடத்திய பட்டிமன்றத்தில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சு.பங்காரு நடுவராக இருந்தாா். இந்நிகழ்ச்சிக்கு மகளிா் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் கோ.சாந்தி உள்ளிட்டோா் ஏற்பாடு செய்திருந்தனா். ‘குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது பெண்களே’ என்று கல்லூரி முதல்வா் தீா்ப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT