நாமக்கல்

கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்: நாமக்கல் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்

25th Nov 2022 01:58 AM

ADVERTISEMENT

பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 12 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான பணியை சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா் (படம்).

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளியில், சென்னையைச் சோ்ந்த ஜோகோ மென்பொருள் நிறுவனத்தின் நன்கொடை நிதியின் மூலம் ரூ. 12 லட்சத்தில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளா் எம்.பி.கௌதம், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ராம்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் தரணிபாபு, ஊராட்சி மன்றத் தலைவா்கள் சண்முகம், கஜேந்திரன், ஜோகோ மென்பொருள் நிறுவனத்தின் மேலாளா் அருள்முருகன், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சக்திவேல், குமாா், தலைமை ஆசிரியா் சரவணன், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT