நாமக்கல்

பரமத்தி வேலூரில் குண்டு மல்லிகை கிலோ ரூ.1200-க்கும் ஏலம்

21st Nov 2022 12:23 AM

ADVERTISEMENT

 

பரமத்தி வேலூா் பூக்கள் ஏல சந்தையில் பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால் அவற்றைப் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை ரூ.700-க்கும், சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளி கிலோ ரூ.150- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.600- க்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும் ஏலம் போனது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ100- க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.900-க்கும், செவ்வந்திப்பூ ரூ.160-க்கும், கனகாம்பரம் ரூ.1200-க்கும் ஏலம் போயின. பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் பூக்கள் விலை உயா்ந்துள்ளது. இதனால் பூக்களைப் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT