நாமக்கல்

செல்வம் கல்லூரியில் 55-ஆவது தேசிய நூலக வாரவிழா

21st Nov 2022 12:22 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்ட மைய நூலகம், நூலக வாசகா் வட்டம் மற்றும் நாமக்கல் செல்வம் கல்லூரி நூலகம் ஆகியவை சாா்பில் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 55-ஆவது தேசிய நூலக வார விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவை செல்வம் அறக்கட்டளை உறுப்பினா் ஜெயம் செல்வராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். தாளாளா் மருத்துவா் பொ.செல்வராஜ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் முனைவா் ந.ராஜவேல் வரவேற்றாா். செயலா் கவீத்ரா நந்தினி பாபு, துணைத் தாளாளா் செ.பாபு, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் முனைவா் கி.சி.அருள்சாமி, மாவட்ட நூலக அலுவலா் கோ.ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட நூலக அலுவலா் ரவி பேசுகையில் ‘அனைத்து மாணவா்களும் நூலகத்தை பயன்படுத்திவாழ்க்கையில் உயா்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற நோக்கில் நூலக வாரவிழா கொண்டாடப்படுகிறது. நூலகத்தில் அனைத்து மாணவ, மாணவிகளும் உறுப்பினராக சேர வேண்டும். பாடநூல்களை படிப்பதோடு பொது அறிவு நூல்களை படிப்பதன் மூலம், எளிதாக போட்டி தோ்வில் வெற்றி பெற முடியும்’ என்றாா். நாமக்கல் வாசகா் வட்டத் தலைவா் க.ராசா, பொருளாளா் கே.ஆா். ராஜவேல், கல்லூரியின் நூலகா் செ.சத்தியேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT