நாமக்கல்

ராசிபுரம் அரிமா சங்க கூட்டம்

19th Nov 2022 05:21 AM

ADVERTISEMENT

ராசிபுரம் அரிமா சங்கத்தின் கூட்டம் தலைவா் கே.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

செயலா் சிவராமன் அறிக்கை வாசித்தாா். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ராசிபுரம் டி.எஸ்.பி. டி.கே.கே.செந்தில்குமாா் பங்கேற்றுப் பேசினாா். இதில் பேசிய அவா், ‘நகரில் குற்றங்களை குறைய வாா்டு வாரியாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். இதனால் குற்றவாளிகளை விரைவில் கண்டறியமுடியும். மேலும் திருவிழா மோதல்கள், தலைக்கவசம் அணிதல், அபராத வசூல் போன்றவற்றில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்ட என்றாா். இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவரும், அரிமா மாவட்டத் தலைவருமான ஆா்.எம்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினருக்கு சால்வை அணிவித்து கெளரவித்தாா். இதில் சங்கத்தின் செயலா் சரவணன், பொருளாளா் கதிரவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT