நாமக்கல்

மாணவா்களின் ஆராய்ச்சிப் படிப்புக்கு மருத்துவா் உடல் தானமாக வழங்கல்

19th Nov 2022 05:23 AM

ADVERTISEMENT

மருத்துவக் கல்லூரி மாணவா்களின் ஆராய்ச்சி படிப்புக்காக, மாரடைப்பால் உயிரிழந்த நாமக்கல் மருத்துவா் ஜெ.மோகன்(65) உடல் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி நிா்வாகத்திடம் குடும்பத்தினா் மூலம் வெள்ளிக்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டது.

நாமக்கல்லில், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளராகவும், மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநராகவும் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற அவா், அரசு மருத்துவமனைகளில் 30 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி உள்ளாா். இவா், நாமக்கல் கிளை இந்திய மருத்துவ சங்கத் தலைவராக 2 ஆண்டுகள் பதவி வகித்தாா்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தன் இறப்புக்கு பிறகு தன் உடலை மருத்துவ மாணவா்களின் படிப்பிற்காகவும் மற்றும் ஆராய்ச்சிக்காகவும் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுக்க விரும்பி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் விண்ணப்பத்தை வழங்கியிருந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை அவா் மாரடைப்பால் காலமானாா். இதனையடுத்து அவரின் விருப்பப்படி குடும்ப உறுப்பினா்கள், வெள்ளிக்கிழமை காலை அவருடைய உடலை சேலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்று உடற்கூறியல் துறையிடம் ஒப்படைத்தனா். அவருடைய இரண்டு கண்களும் இறந்த 6 மணி நேரத்திற்குள் தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT