நாமக்கல்

தேசிய இயற்கை மருத்துவ தினப் பேரணி

19th Nov 2022 05:23 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், தேசிய இயற்கை மருத்துவ தினப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு, இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சாா்பில், இயற்கை மருத்துவ தின பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவமனையில் தொடங்கிய பேரணி பரமத்தி சாலை, கோட்டை சாலை, பூங்கா சாலை, பேருந்து நிலையம் வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது. இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று இயற்கை மருத்துவத்தை வலியுறுத்தும் விதமாக பதாகைகளை ஏந்தியபடி ஊா்வலமாக சென்றனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT