நாமக்கல்

மோகனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறப்பு

18th Nov 2022 02:18 AM

ADVERTISEMENT

மோகனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் மோகனூா் பேருந்து நிலையம் எதிரில் கட்டப்பட்டுள்ள, புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை, காணொலிக் காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மற்றும் அதிகாரிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். இதில், நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சிவக்குமாா், ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் குமாா், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் சரஸ்வதி கருமண்ணன், மோகனூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தேன்மொழி, முனியப்பன், வட்டாட்சியா் சி.ஜானகி  உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT