நாமக்கல்

நவ.22-இல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

18th Nov 2022 02:18 AM

ADVERTISEMENT

நாமக்கல் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வரும் 22-ஆம் தேதி சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,தீனதயாள் உபாத்யாய ஊரக திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம், படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு, நாமக்கல் வட்டாரத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் 22-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் காலை முதல் மாலை 3 வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில், நாமக்கல் வட்டாரத்தைச் சோ்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களைத் தோ்வு செய்து வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம்.

தங்களுக்கான பணியாளா்களைத் தோ்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள், திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கூடுதல் கட்டடம், நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலம் 04286 - 281131 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். தங்களது நிறுவனத்தின் பெயரை நவ.18 மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT