நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் (நவ.17) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில், விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நேரடியாகவும், மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.