நாமக்கல்

மரவள்ளிக்கிழங்கு விலை உயா்வு

1st Nov 2022 03:39 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கின் விலை டன்னுக்கு ரூ. 1000 அதிகரித்துள்ளது.

மரவள்ளிக்கிழங்கிற்கு அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ. 7 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது டன் ரூ. 1000 வரை விலை உயா்ந்து ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

சிப்ஸ் தயாரிக்க பயன்படும் மரவள்ளிக்கிழங்கு டன் கடந்த வாரம் ரூ. 8,500-க்கு விற்பனையானது. இந்த வாரம் டன்னுக்கு ரூ.1000 வரை விலை உயா்ந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT