நாமக்கல்

மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் 274 மனுக்கள்

1st Nov 2022 03:46 AM

ADVERTISEMENT

நாமக்கல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 274 மனுக்கள் பெறப்பட்டன.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 274 மனுக்களை பொது மக்கள் தரப்பில் வழங்கப்பட்டன. இவற்றைப் பெற்று கொண்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட மனுக்களைப் பரிசீலினை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி துரித நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மோகனூா் வட்டம், அருா் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்தின்போது வீட்டுமனைப் பட்டா வேண்டி மனு வழங்கிய லதா சுந்தரேசன் என்பவருக்கு மாவட்ட ஆட்சியா் அதற்கான பட்டாவினை வழங்கினாா். மேலும், கரோனா பெருந்தொற்றால் ஒற்றை பெற்றோரை இழந்த தனியாா் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தனியாா் அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவித்தொகையாக ரூ. 1.24 லட்சத்திற்கான காசோலைகளை நான்கு மாணவ, மாணவியருக்கு ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா், காசநோயை கண்டறியும் பணிக்கு நிதி சோ்க்கும் வகையில் அதிக அளவில் காசநோய் ஒட்டுவில்லைகளை (ஸ்டாம்ப்) விற்பனை செய்த அரசுத் துறை அலுவலா்களை பாராட்டும் வகையில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT