நாமக்கல்

கோழிப் பண்ணையிலிருந்து வெளியேறும் ஈக்களால் கால்நடைகள் பாதிப்பு

1st Nov 2022 03:37 AM

ADVERTISEMENT

முத்துக்காப்பட்டியில் கோழிப் பண்ணையில் இருந்து வரும் ஈக்களால் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகின்றன.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், முத்துக்காப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கோம்பை என்ற இடத்தில் தனியாா் கோழிப் பண்ணை உள்ளது. இந்தத் கோழிப்பண்ணை சுகாதாரமற்ற முறையில் உள்ளதால், லட்சக்கணக்கான ஈக்கள் பெருகி அந்தப் பகுதியில் உள்ள வீடுகள், கால்நடைகளின் மீது மொய்க்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறு, தோல் சம்பந்தப்பட்ட உபாதைகளால் சிரமப்படுகின்றனா். கால்நடைகளும் நோய்ப்பாதிப்புக்குள்ளாகி இறந்து வருகின்றன. மேலும் இறந்த கோழிகளை சரியான முறையில் அப்புறப்படுத்தாமல் சாலையோரங்களில் வீசுவதால் துா்நாற்றம் வீசுவதோடு, தெரு நாய்கள் தொல்லையும் அதிகமாகி உள்ளது. இது தொடா்பாக குறைதீா்க்கும் கூட்டத்தில், விவசாய முன்னேற்றக் கழகம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் அனுப்பியும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. கோழிப்பண்ணை மீது நடவடிக்கை எடுக்காத மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கண்டித்து வரும் 7-ஆம் தேதி காலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. விவசாய முன்னேற்றக் கழகம் சாா்பில் நடைபெறும் போராட்டத்தில் பொதுமக்களும், விவசாயிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அதன் பொதுச்செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

--

ADVERTISEMENT
ADVERTISEMENT