நாமக்கல்

ரூ. 65 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

24th May 2022 11:29 PM

ADVERTISEMENT

 

நாமக்கல் வேளாண் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 65 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவுச் சங்கத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. மே 24 நடைபெற்ற ஏலத்தில் விற்பனைக்காக 1,800 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.

ஆா்சிஹெச் ரகம் ரூ. 10,869 முதல் ரூ. 13,869 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ.10,900 முதல் ரூ.13,222 வரையிலும், மட்ட ரகம் ரூ. 5,699 முதல் ரூ.8,999 வரையில் ஏலம் போனது. மொத்தம் ரூ. 65 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. வியாபாரிகள் தரம் பாா்த்து பருத்தியைக் கொள்முதல் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT