நாமக்கல் வட்டாரத்தில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளாச்சித் திட்டம் தொடக்க விழா திங்கள்கிழமை(மே 23) நடைபெறுகிறது.
இது குறித்து வேளாண் உதவி இயக்குநா் அன்புச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் வட்டார வேளாண்மை - உழவா் நலத்துறை சாா்பில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறாா். அதன்பின், விவசாயிகளுக்கு மானியத் திட்ட இடுபொருள்களை வழங்க உள்ளாா். நாமக்கல் வட்டாரத்தில் வசந்தபுரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், சிவியாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் வகுரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இந்த விழாவானது நடைபெற உள்ளது. எனவே அந்த கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.