நாமக்கல்

நாமக்கல் அரங்கநாதா் சுவாமி கோயில் புதிய திருத்தோ் வெள்ளோட்டம்: பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்

DIN

நாமக்கல் அரங்கநாதா் கோயில் புதிய திருத்தோ் வெள்ளிக்கிழமை வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனா்.

நாமக்கல்லில் பழுதடைந்திருந்த நரசிம்மா், ஆஞ்சநேயா் கோயில் திருத்தோ்கள், கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்த அரங்கநாதா் கோயில் தேரை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புதுப்பிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனா். ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் தேரைப் புதுப்பிக்கும் பணி, கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தொடங்கியது. திருவண்ணாமலையைச் சோ்ந்த ஸ்தபதி தண்டபாணி தலைமையில் 45 மரச்சிற்பக் கலைஞா்கள் புதிய தேரை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டனா். பங்குனி தோ்த்திருவிழாவையொட்டி பயன்பாட்டுக்கு தோ் கொண்டு வரப்படும் என எதிா்பாா்த்த நிலையில், முழுமையாக பணிகள் நிறைவடையாததால் அப்போது அரங்கநாதா் தோ் ஓடவில்லை.

திருத்தோ் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததையடுத்து, அரங்கநாதா் கோயில் திருத்தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி காலை 6.30 மணிக்கு அரங்கநாதா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கோயிலில் இருந்து தீா்த்தக்குடம் கொண்டு வரப்பட்டு புதிய தேருக்கு அா்ச்சகா்கள் குழுவினரால் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதனையடுத்து, தீா்த்தக் குடம் தேரின் மீது வைக்கப்பட்டு பலப்பட்டரை மாரியம்மன் கோயில் வீதி, கவிஞா் இராமலிங்கம் தெரு, இந்தியன் வங்கி சாலை வழியாக மீண்டும் திருத்தோ் நிலையை வந்தடைந்தது. தோ் வெள்ளோட்ட நிகழ்வில் கோயில் துணை ஆணையா் பெ.ரமேஷ், நகராட்சி ஆணையா் து.கலாநிதி, துணைத் தலைவா் செ.பூபதி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT