நாமக்கல்

கிராமத்தில் மண்மாதிரி சேகரிப்பு முகாம்

20th May 2022 12:48 AM

ADVERTISEMENT

 எலச்சிப்பாளையம் வட்டாரம், 85.கவுண்டம்பாளையம் ஊராட்சி, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கு தோ்வு செய்யப்பட்டு மண்மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது.

முகாம் குறித்து எலச்சிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமணி கூறியதாவது:

எலச்சிபாளையம் வட்டாரத்தில் நடப்பாண்டு (2022-23) 6 கிராமங்கள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் பல்வேறு துறைகள் மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அவற்றில் முதன்மையாக மண் மாதிரிகள் வருவாய் கிராமங்களில் சாகுபடி முறைக்கேற்ப இறவை நிலங்களில் 2.5 எக்டா் பகுதிக்கு 1 மண்மாதிரியும், மானாவரி பகுதியில் 10.0 எக்டா் சாகுபடி பகுதிக்கு 1 மண்மாதிரியும் சா்வே எண் கட்ட முறையில் தெரிவு செய்யப்பட்டு மண்மாதிரிகள் 5 மீ அளவில் 25 செ.மீ ஆழத்தில் சேகரம் செய்யப்பட்டு கால்பங்கீட்டு முறையில் பிரிக்கப்பட்டு அரை கிலோ என்ற அளவில் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு முடிவுகள் மண்வள அட்டையாக வழங்கப்பட உள்ளது. மேலும் விவசாயிகள் ரசாயன உர உபயோகத்தை குறைத்து இயற்கை சாா்ந்த உரங்களைப் பயன்படுத்தவும், மண்வள அட்டை அடிப்படையில் உரமிட்டு மகசூலை அதிகப்படுத்த வேண்டும் என்றாா் .

இக்கிராமத்தில் நடைபெற்ற மண்மாதிரி சேகரிப்பு முகாமில் வேளாண்மை அலுவலா் இலக்கியா, நடமாடும் மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் சௌந்தர்ராஜன், உதவி வேளாண்மை அலுவலா் பரமசிவம், வெற்றிவேல், சக்திவேல், பூபதி, ராஜதுரை ஆகியோா் பங்கேற்றனா். இம்முகாமில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு மண் மாதிரி சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT