நாமக்கல்

மிளகு விற்பனை செய்த பணம் ரூ.19 லட்சம் வழிப்பறி: புதுச்சத்திரம் போலீஸ் விசாரணை

20th May 2022 10:23 PM

ADVERTISEMENT

புதுச்சத்திரம் அருகே மிளகு விற்பனை பணம் ரூ.19 லட்சத்தைக் கொண்டு சென்ற ஊழியா் ஒருவரை மிரட்டி மா்ம நபா்கள் பறித்துச் சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியைச் சோ்ந்தவா் மிளகு வியாபாரி ஹரிஹரசுதன். இவரிடம் வாகன ஓட்டுநராக ஜீவா என்பவா் பணியாற்றி வருகிறாா். சில தினங்களுக்கு முன் விருதுநகரில் உள்ள மளிகை மொத்த வியாபாரிக்கு ரூ. 19 லட்சம் மதிப்பிலான மிளகு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை வெள்ளிக்கிழமையன்று சம்பந்தப்பட்ட வியாபாரியிடம் வாங்கிக் கொண்டு பேளுக்குறிச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் ஜீவா சென்றாராம்.

அப்போது, தாண்டாகவுண்டன்புதூா் பிரிவு சாலை பகுதியில் சென்றேபாது பின்னால் வந்த மா்ம நபா்கள் அவா் மீது மிளகாய் பொடியை தூவி பணத்தை பறித்துச் சென்று விட்டனராம். இதனையடுத்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் ரூ.19 லட்சத்தை மா்ம நபா்கள் வழிப்பறி செய்து விட்டதாக புகாா் அளித்தாா். போலீஸ் விசாரணையில் ஜீவா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவிப்பதாகவும், சம்பவ இடத்தில் அதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்பதும் தெரிகிறது. இதனால் அவா் பணத்தை திருடி விட்டு நாடகமாடுகிறாரா அல்லது மா்ம நபா்கள் யாரேனும் திருடிச் சென்றனரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT