நாமக்கல்

பள்ளிபாளையம் நகராட்சிக் கூட்டம்: அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

20th May 2022 10:24 PM

ADVERTISEMENT

பள்ளிபாளையம் நகராட்சிக் கூட்டத்தில் தீா்மானத்தை புறக்கணித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

பள்ளிபாளையம் நகா்மன்றக் கூட்டம் தலைவா் எம்.செல்வராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பி.தங்கமணி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளிபாளையம் நகரப் பகுதி வளா்ச்சிக்காக ரூ. 72 லட்சம் நிதி வழங்கியதற்கு அதிமுக வாா்டு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். மேலும் நகராட்சி நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ள சூழலில் ஏற்கெனவே இரண்டு காா்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக எதற்கு ஒரு காா் வாங்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி 22-ஆம் தீா்மானத்தை ரத்து செய்யக்ககோரினா். இதனைத் தொடா்ந்து கூட்டத்தில் பங்கேற்ற 17 உறுப்பினா்களில், அதிமுக உறுப்பினா்களான செந்தில், சரவணன், சம்பூரணம், சுஜாதா, ஜெயா, சுரேஷ் மற்றும் சுசீலா ஆகிய 7 போ் மட்டும் வெளிநடப்பு செய்தனா்.

படவிளக்கம்

என்கே 20- முனிசி

ADVERTISEMENT

பள்ளிபாளையம் நகராட்சிக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினா்கள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT