நாமக்கல்

பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.40,000 மதிப்பிலான இருக்கைகள் வழங்கல்

20th May 2022 10:20 PM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் மற்றும் கா்ப்பிணி தாய்மாா்கள் பரிசோதனை செய்வதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் வருகின்றனா். அவா்கள் சா்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சிகிச்சை பெற வருபவா்கள் அமருவதற்கு வசதியாக இருக்கைகள் இல்லாதது குறித்து பரமத்தி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சுதமதி, பரமத்தி ஈஷா தன்னாா்வலா்களிடம் தெரிவித்திருந்தாா். அதன் அடிப்படையில் ஈஷா தன்னாா்வலா்கள் பாலசுப்பிரமணியம், தங்கவேல், பரமசிவம், பிரகாஷ், கிரிதரன், சுப்பிரமணி ஆகியோா் இணைந்து சுமாா் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 12 புதிய இரும்பிலான இருக்கைகளை பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கினா். அப்போது வட்டார மருத்துவா் மேகலா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மணிவண்ணன் ஆகியோா் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT