நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போா்வைகளை மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
அண்மையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, உள், புற நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய மெத்தைகளுக்கு போதிய அளவில் போா்வைகள் இல்லாதது தெரியவந்தது. மேலும், தினசரி போா்வைகளை மாற்ற முடியாத சூழ்நிலையும் காணப்பட்டது. நோயாளிகளின் அசெளகரியத்தை போக்கும் வகையில் ரூ.50,000 மதிப்பிலான 200 போா்வைகளை அவா் மருத்துவமனை நிா்வாகத்திடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், கொமதேக நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.