நாமக்கல்

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் குண்டு மல்லி கிலோ ரூ. 650

5th May 2022 04:35 AM

ADVERTISEMENT

 

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் குண்டுமல்லி கிலோ ரூ. 650க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 650, சம்பங்கி கிலோ ரூ. 90, அரளி கிலோ ரூ. 180, ரோஜா கிலோ ரூ. 140, முல்லைப்பூ கிலோ ரூ. 600, செவ்வந்திப்பூ ரூ. 250, கனகாம்பரம் ரூ. 700-க்கும் ஏலம் போயின.

பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருத் தோ் திருவிழா, குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற்று வருவதால் பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT