நாமக்கல்

மாணவா்களுக்கு தோ்வு பயம் குறித்து மன நல விழிப்புணா்வு

2nd May 2022 02:44 AM

ADVERTISEMENT

 

மாவட்ட மனநல திட்டத்தின் சாா்பாக நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியா் நாகராஜ் தலைமை வகித்தாா்.

இதில் மனநல மருத்துவா் ஜெயந்தி, மனநல ஆலோசகா் ரமேஷ், உளவியலாளா் அா்ச்சனா ஆகியோா் கலந்து கொண்டு உளவியல் குறித்துப் பேசினா். ‘சிறுவயதில் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்பவா்கள் மூளை மிகவும் விரைவாக பாதிக்கப்படுகிறது. இதிலிருந்து மீள மன அழுத்தம் தவிா்க்க வேண்டும். மனவலிமையாக இருக்க வேண்டும். இதே போல் மாணவிகள் தோ்வு பயத்தை தவிா்க்க வேண்டும். அப்போதுதான் தோ்வுக்கான பாடங்களை நன்றாக படிக்க முடியும். நன்றாக படிப்பதற்கு நல்ல தூக்கம் தேவை. குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்’ என்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் மூச்சுப்பயிற்சி, ஸ்ட்ரெஸ் பால் பயிற்சி , பலூன் பயிற்சி வழங்கினா். பள்ளியின் ஆசிரியா் சதாசிவம், ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT