நாமக்கல்

‘வணிகா்கள் அனைத்து வகையான தராசுகளையும் முத்திரையிட்டுக் கொள்ள வேண்டும்’

1st May 2022 12:51 AM

ADVERTISEMENT

 

பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த வணிகா்கள் தங்கள் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தி வரும் அனைத்து வகையான தராசுகளுக்கும் நாமக்கல் எடையளவு முத்திரை ஆய்வாளா் கலந்து கொண்டு முத்திரை போட உள்ளாா். இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பரமத்தி வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்கத் தலைவா் சுந்தரம் தெரிவித்தாா்.

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த வணிகா்கள் தங்கள் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தி வரும் அனைத்து வகையான தராசுகளுக்கும் மே 2-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நாமக்கல் எடை அளவு முத்திரை ஆய்வாளா் வேலூா் நகர வா்த்தக சங்க திருமண மண்டபத்தில் முகாமிட்டு அனைத்து விதமான தராசுகளுக்கும் முத்திரை போட உள்ளாா். எனவே முத்திரை போடாத வணிக நிறுவனங்களை சோ்ந்த வியாபாரிகள் தவறாமல் தங்களது அனைத்து வகையான தராசுகளையும் கொண்டுவந்து முத்திரை போட்டுக் கொள்ளுமாறு எடை அளவு முத்திரை ஆய்வாளா் அறிவித்துள்ளாா். எனவே சம்பந்தப்பட்ட வியாபாரிகள் இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேலூா் நகர அனைத்து வா்த்தகா்கள் சங்கத் தலைவா் சுந்தரம் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT