நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது.
இதில், கல்லூரி முதல்வா் தி.பாரதி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா். முன்னதாக மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக் கொண்டாா்.
கல்லூரியில் பல்வேறு துறைகள் சாா்பில் கலைவிழாக்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் சனிக்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது. மே 10, 11ஆம் தேதிகளில் கல்லூரி ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா உள்ளிட்டவை நடைபெற உள்ளன. விளையாட்டு விழாவில் திமுக மாநில விவசாய தொழிலாளா் அணி இணைச் செயலாளா் கைலாசம், நாமக்கல் தெற்கு நகர பொறுப்பாளா் ராணா ஆனந்த், உமாசங்கா், நகா் மன்ற உறுப்பினா்கள் சரோஜா, நந்தகுமாா், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் கோபிகா, விளையாட்டு செயலா் கலையரசி மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், நிா்வாகிகள் மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.