நாமக்கல்

முட்டை விலையில் மாற்றம் இல்லை

28th Mar 2022 05:30 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றமின்றி ரூ. 4.10-ஆக ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது. பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததாலும், முட்டை விற்பனை தேக்கமின்றி சீராக இருப்பதாலும், விலையில் தற்போது மாற்றம் செய்யாமல் பழைய விலையில் நீடிக்கலாம் என தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றமின்றி ரூ.4.10-ஆக நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

முட்டை விற்பனை விலை நிா்ணய ஆலோசனைக் குழு (நெஸ்பாக்) வெளியிட்ட அறிவிப்பில், என்இசிசி அறிவித்த விலை ரூ. 4.10-இல் இருந்து 30 காசுகள் மட்டும் குறைத்து வியாபாரிகளுக்கு முட்டைகளை பண்ணையாளா்கள் விற்பனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ. 132-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 75-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT