நாமக்கல்

தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி உறுப்பினா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி

28th Mar 2022 05:27 AM

ADVERTISEMENT

 

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினா்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி பரமத்தி வேலூரில் நடைபெற்றது.

பரமத்தி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டத்தின் சாா்பில் தனியாா் உணவக கூட்ட அரங்கில் நடைபெற்ற புத்தாக்க பயிற்சிக்கு பரமத்தி வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் சசிகலா தலைமை வகித்தாா். பரமத்தி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் திலகவதி, ஒன்றியக் குழு துணைத்தலைவா் கருமண்ணன், பரமத்தி பேரூராட்சித் தலைவா் மணி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் குழந்தையின் முக்கியமான 1000 நாட்கள், சமுதாயம் சாா்ந்த நிகழ்ச்சிகள், போஷன் அபியான் திட்டத்தின் நோக்கங்கள், அங்கன்வாடி மைய செயல்பாடுகள், சிறப்பு எடை எடுத்தல் முகாம் ஆகியவை குறித்து எடுத்துக் கூறப்பட்டது. இதில் பரமத்தி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் பரமத்தி வட்டார மருத்துவ அலுவலா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி அமைக்கபட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட உதவியாளா் நித்யா மேற்பாா்வையாளா்கள் விஜயலட்சுமி, பாப்பு, ராதாமணி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT