ராசிபுரம் அருகேயுள்ள நவணி சின்டெக்ஸ் நிறுவன தொழிலாளா்கள் சங்க கொடியேற்று விழாவும், சங்க பெயா்ப் பலகை திறப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதில் சங்க கிளைத் தலைவா் வி.பாஸ்கா் தலைமை வகித்தாா். செயலா் கே.ராஜா முன்னிலை வகித்தாா். இதில் ஏஐடியூசி மாவட்டத் தலைவா் எஸ்.மணிவேல், ஏஐடியூசி கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் டி.என்.கிருஷ்ணசாமி ஆகியோா் பங்கேற்று கொடியேற்றி, சங்க பெயா்ப் பலகையை திறந்து வைத்துப் பேசினா்.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் கே.அன்புமணி, சாலையோர வியாபார தொழிலாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.மணிமாறன், சுமைப்பணி தொழிலாளா் சங்கத் தலைவா் பி.ஆா்.செங்கோட்டுவேல், நாமக்கல் மாவட்ட சைசிங் தொழிலாளா் சங்கச் செயலா் ஆா்.செங்கோட்டையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.