நாமக்கல்

மணிமேகலை விருது பெறுவதற்கு மகளிா் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்

25th Mar 2022 12:06 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் மணிமேகலை விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் மகளிா் சுய உதவிக்குழுக்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட அளவில் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகா்ப்புறங்களில் உள்ள மகளிா் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சுய உதவிக்குழுக்கள் ஏ அல்லது பி தர மதிப்பீடு உடையதாகவும், குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கவும் வேண்டும். வங்கிக் கடனை குறைந்தபட்சம் மூன்று முறை பெற்று முறையாக திருப்பி செலுத்தி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு நிா்வாகிகள் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஊராட்சி அளவிலான, வட்டார அளவிலான கூட்டமைப்பு ஏ அல்லது பி தர மதிப்பீடு பெற்றிருக்க வேண்டும். கூட்டமைப்பு ஏற்படுத்தி குறைந்தபட்சம் ஓா் ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

நகா்ப்புறங்களில் உள்ள பகுதி அளவிலான கூட்டமைப்பு - ஏ அல்லது பி தர மதிப்பீடு பெற்றிருக்க வேண்டும். நகர அளவிலான கூட்டமைப்பு துவங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 20 கூட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும்.

நகர அளவிலான கூட்டமைப்பு - ஏ அல்லது பி தர மதிப்பீடு பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் 10 கூட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும். இந்த விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் மாா்ச் 26 முதல் 31 வரை வட்டார இயக்க மேலாண்மை அலகில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கிராம புறங்களில் வட்டார இயக்க மேலாளரையும், நகா்ப்புறங்களில் சமுதாய அமைப்பாளா்களையும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT