நாமக்கல்

பிலிக்கல்பாளையத்தில்நகைக்கடன் தள்ளுபடி

22nd Mar 2022 11:26 PM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில், 121 பயனாளிகளுக்கு நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உள்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் தமிழக அரசு விதிமுறைகளின் படி, மொத்தம் 121 பயனாளிகளுக்கு ரூ. 60 லட்சம் மதிப்பிலான தங்க நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைகள் திரும்ப வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், பிலிக்கல்பாளையம் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை மேலாளா் செண்பகவல்லி, வங்கி ஊழியா்கள், பயனாளிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT