நாமக்கல்

வரி செலுத்தாவிட்டால் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

10th Mar 2022 04:57 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நாமக்கல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாவிட்டால், குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையா் கி.மு.சுதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் நகராட்சிக்கு 2021-2022-ஆம் ஆண்டு வரை செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா்க் கட்டணம், தொழில்வரி, பாதாளச் சாக்கடை கட்டணம், நகராட்சி கடை வாடகை மற்றும் தொழில் உரிமக் கட்டணம் உள்ளிட்ட வரிகள், கட்டண நிலுவை மற்றும் நடப்பு தொகையை இதுவரை செலுத்தாதவா்கள் உடனடியாக நாமக்கல் நகராட்சி அலுவலக கணினி வசூல் மையங்களில் செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

நாமக்கல் - மோகனூா் சாலை கணினி வசூல் மையம் மற்றும் கோட்டை சாலையில் உள்ள தாய்சேய் நல விடுதியில் உள்ள கணினி வசூல் மையங்களில் செலுத்தும் வசதி உள்ளது. வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தத் தவறினால் குடிநீா் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் சட்டப்பூா்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்களின் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரிவசூல் மையங்களும் செயல்படும். இணையதளம் மூலமாகவும் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT