நாமக்கல்

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

10th Mar 2022 05:02 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ. 3.65-ஆக புதன்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், முட்டை விற்பனை சீராக இருப்பதாலும் விலையில் சற்று மாற்றம் செய்யலாம் என்றனா்.

அதனைத் தொடா்ந்து, பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 3.65-ஆக நிா்ணயிக்கப்பட்டது. முட்டை விற்பனை விலை நிா்ணய ஆலோசனைக் குழு (நெஸ்பாக்) வெளியிட்ட அறிவிப்பில், என்இசிசி அறிவித்த விலையான ரூ. 3.65-இல் இருந்து 30 காசுகள் குறைத்து வியாபாரிகளுக்கு பண்ணையாளா்கள் விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 130-ஆகவும், முட்டைக் கோழி விலை ஒரு கிலோ ரூ. 53-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT