நாமக்கல்

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் மாசிக் குண்டம் திருவிழா

10th Mar 2022 04:58 AM

ADVERTISEMENT

 

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் மாசிக் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் மாசிக் குண்டம் திருவிழா கடந்த 25-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தீா்த்தக் குடம் எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல் ஆகிய நிகழ்வுக்கு பிறகு விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அதிகாலை 4 மணிக்கு கோயில் பூசாரி கும்பத்துடன் குண்டத்தில் இறங்கி தொடக்கி வைத்ததைத் தொடா்ந்து, ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரிசையாக குண்டத்தில் இறங்கினா். 60 அடி நீள குண்டத்தில் ஆண்கள், கைக்குழந்தையுடன் பெண்கள் வரிசையாக இறங்கினா். இந்நிகழ்ச்சியைத் தொடா்ந்து பொங்கல் வைத்து அம்மனை பக்தா்கள் வழிபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT