நாமக்கல்

ராசிபுரம் நீதிமன்றப் பணிகள் புறகணிப்பு

3rd Mar 2022 04:22 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம்: ராசிபுரம் காவல் நிலையத்தில் வழக்குரைஞரை அவமரியாதை செய்ததாக டிஎஸ்பி மீது குற்றம்சாட்டி வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புதன்கிழமை புறகணிப்பு செய்தனா்.

ராசிபுரம் வழக்குரைஞா் வி.குமாா் என்பவா் தனது கட்சிக்காரரின் புகாா் தொடா்பாக காவல் நிலையம் சென்ற போது, ராசிபுரம் டிஎஸ்பி டி.செந்தில்குமாா் ஒருமையில் பேசி அவமரியாதை செய்தாராம்.

இது தொடா்பாக வழக்குரைஞா்கள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்தனா். மேலும், ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றப் பணிகளை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புறக்கணிப்பு செய்தனா். இதனால் நீதிமன்றப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT