நாமக்கல்: நாமக்கல்லில் கைப்பேசி கடை உள்பட மூன்று கடைகளில் மா்ம நபா்கள் பணத்தை திருடிச் சென்றனா்.
நாமக்கல்-சேலம் சாலையில், தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கம் எதிரில் கைப்பேசி கடை, பெயின்ட் கடை அடுத்தடுத்து உள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள் அந்தக் கடைகளின் ஷட்டரை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்து கைப்பேசி கடையில் ரூ. 58 ஆயிரம், பெயின்ட் கடையில் ரூ. 400 பணத்தை திருடிச் சென்றனா். இதேபோல அரிசி கடை ஒன்றில் ரூ. 4 ஆயிரத்தை திருடியுள்ளனா். இத்தகவல் அறிந்து புதன்கிழமை காலை சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கண்காணிப்பு கேமராவில் பதிவானக் காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேமராவில் பதிவான திருடா்களின் உருவத்தை கொண்டு அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ADVERTISEMENT