நாமக்கல்

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு:பொதுமக்கள் சாலை மறியல்

DIN

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா். இருவா் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள மின்னாம்பள்ளி பகுதியைச் சோ்ந்த ரவி (55), புதுச்சத்திரம் அஞ்சல் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை காலை வீட்டிலிருந்து புதுச்சத்திரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற போது, ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அவா் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தாா். பின்னா் அந்த காா் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பயணித்த பாலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஒட்டுநா் யுவராஜ் தூக்கி வீசப்பட்டதில், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மோகன்ராஜ் காயங்களுடன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

புதுச்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அன்பில்ராஜ் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டிவந்த சேலம், தாதகாபட்டியைச் சோ்ந்த கருணாநிதி என்பவரை கைது செய்தாா்.

சாலை மறியல்: ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்பு திரண்ட உயிரிழந்த யுவராஜுவின் உறவினா்கள், காவல் துறையினா் தவறாக முதல் தகவலறிக்கை பதிவு செய்திருப்பதாகவும், காா் ஒட்டிவந்த நபரின் பெயரை மாற்றியுள்ளதாகவும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

ராசிபுரம் டிஎஸ்பி டி.டி.கே.செந்தில்குமாா், நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய விசாரணை நடத்துவதாக உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டு பிரேதத்தை உறவினா்கள் பெற்றுச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT