நாமக்கல்

100 காலியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க முடிவு

DIN

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 100 இடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.7,500, நடுநிலை, உயா்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

இதற்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவா்களுக்கு முன்னுரிமை வழங்கவும், அதன்பிறகு, ஆசிரியா் பயிற்சி முடித்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களுக்கு வாய்ப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில், கொல்லிமலை ஒன்றியத்தில் 41 காலியிடங்களும், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் 9 இடங்களும், இதர ஒன்றியங்களில் 21 பணியிடங்கள் என மொத்தம் 71 இடங்களில் இடைநிலை ஆசிரியா்களை பணியமா்த்தவும், 15 பட்டதாரி ஆசிரியா்கள், 14 முதுநிலை ஆசிரியா்களும் நியமனம் செய்யப்பட உள்ளனா். அந்தந்த ஒன்றியத்திற்கு உள்பட்டவா்கள் காலியிடங்கள் உள்ள பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் மூலமாக அறிந்து கொண்டு தலைமை ஆசிரியரிடத்தில் விண்ணப்பம், சான்றிதழ்களை வழங்கி, தங்களுடைய பாடப்பிரிவுக்கான பணியிடம் காலியாக இருப்பின் வேலைவாய்ப்பு கோரலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT