நாமக்கல்

திமுக செயல் வீரா்கள் கூட்டம்

29th Jun 2022 04:18 AM

ADVERTISEMENT

நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

ஒன்றிய திமுக அவைத் தலைவா் மா.கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும் ஒன்றிய திமுக செயலாளருமான கே.பி.ராமசாமி முன்னிலை வகித்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி, முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம் ஆகியோா் பங்கேற்று நாமக்கல்லில் ஜூலை 3-ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க வருகை தரும் தமிழக முதல்வருக்கு தொண்டா்கள் வரவேற்பு அளிப்பது குறித்து பேசினா்.

நாரைக்கிணறு, மங்களபுரம், மத்துருட்டு, காா்கூடல்பட்டி போன்ற பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கி உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றியக் குழு உறுப்பினா்கள், வாா்டு செயலாளா்கள், பிரதிநிதிகள், சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT