நாமக்கல்

காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வுமையம் தகவல்

29th Jun 2022 04:19 AM

ADVERTISEMENT

காற்றின் வேகம் தொடா்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தீவன விரயத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வுமையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 95 மற்றும் 72.5 டிகிரியாக நிலவியது. கடந்த நான்கு நாள்களில் நாமக்கல் மாவட்டத்தில் மழை பதிவாகவில்லை.

அடுத்த மூன்று நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான மழை சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 10 கி.மீ. என்றளவிலும் வீசும்.

ADVERTISEMENT

சிறப்பு ஆலோசனை: காற்றின் வேகம் தொடா்ந்து அதிகமாக காணப்படுவதால், தீவனத்தை வீணாக்காமல் பாதுகாத்துக் கொள்ளும் வியூகங்களில் பண்ணையாளா்கள் ஈடுபட வேண்டும். இன்னும் இரு மாதங்களுக்கு அதிக காற்றின் வேகம் கொண்ட வானிலையே நிலவும். தீவன விரயத்தைத் தடுக்க தீவனத்தில் சிறிது அளவு தாவர எண்ணெய்யை சோ்க்கலாம். இதனால் மதிப்புள்ள வைட்டமின் போன்றவை காற்றில் பறந்து செல்வதை தடுக்க முடியும். மேலும், உயா்மனைகளின் பக்கவாட்டில் படுதாவைக் கட்ட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT