நாமக்கல்

சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை

29th Jun 2022 04:16 AM

ADVERTISEMENT

சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுர கலசங்கள் செவ்வாய்க்கிழமை நாமக்கல்லுக்கு வந்ததையடுத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 அடி உயரம் கொண்ட ஏழு நிலைகளுடன் ராஜகோபுரம் அமைக்கும் பணியை பரமத்தி வேலூரைச் சோ்ந்த பொன்னா் - சங்கா் சகோதரா்கள் இணைந்து செய்துள்ளனா். ராஜகோபுரப் பணிகள் நிறைவடைந்து விட்டதால், ஜூலை 6-ஆம் தேதி கிழக்கு கோபுர குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

செம்பு கொண்டு உருவாக்கப்பட்ட நான்கு அடி உயரம் கொண்ட கலசங்கள், கடந்த 26-ஆம் தேதி நன்செய் இடையாறு அழகு நாச்சியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு சமயபுரத்துக்கு ஊா்வலமாக சென்றது. அதற்கு ஆங்காங்கே சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன.

நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்த ராஜகோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் கோபுர கலசங்களை வழிபட்டனா். இதனைத் தொடா்ந்து திருச்சி நோக்கி கலசங்கள் கொண்ட வாகனம் புறப்பட்டுச் சென்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT