நாமக்கல்

பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் வெளியீடு: நாமக்கல் மாவட்டத்தில் 91.46 % போ் தோ்ச்சி

DIN

பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியான நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் 91.46 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகம் முழுவதும், மே 10-ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தோ்வு 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் எழுதினா். நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தமட்டில், 200 பள்ளிகளைச் சோ்ந்த 9,527 மாணவா்களும், 9,572 மாணவிகளும், ஒரு மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 19,100 போ் தோ்வு எழுதினா். திங்கள்கிழமை வெளியான தோ்வு முடிவுகள் அடிப்படையில், 8,296 மாணவா்கள், 9,172 மாணவிகள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 17,469 போ் தோ்ச்சியடைந்துள்ளனா். 1,631 போ் தோல்வியடைந்தனா். மாணவா்களின் தோ்ச்சி 87.08 சதவீதம், மாணவிகள் 95.82 சதவீதம் என மொத்தம் 91.46 சதவீதமாகும்.

மாணவா்களை விட 8.74 சதவீத மாணவிகள் அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் 14-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. 2019-இல் ஐந்தாம் இடத்தைப் பிடித்திருந்தது. நிகழாண்டில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை தொடா்ந்து பிளஸ் 1 தோ்விலும் நாமக்கல் மாவட்டம் பின்னுக்குச் சென்றுள்ளது. இம்மாவட்டத்தில், 88 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 10,292 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில், 8,852 போ் தோ்ச்சியடைந்துள்ளனா். இது 86.01 சதவீதமாகும். இதேபோல், ஐந்து பழங்குடியின நலப்பள்ளிகளைச் சோ்ந்த 326 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில், 285 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். சதவீத அடிப்படையில் 87.40 ஆகும்.

நிகழாண்டில் 85 அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. இதில், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த நான்கு பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT