நாமக்கல்

ஜவுளிக் கடையில் ரூ.53,000 திருட்டு

28th Jun 2022 04:20 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் பிரபல ஜவுளிக் கடையில் ரூ.53 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

நாமக்கல்-பரமத்தி சாலையில் பிரபல ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆடவா்களுக்கான ஆடைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் சிலா், அந்த கடையின் ஷட்டரை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்தனா். அங்குள்ள பணப்பெட்டியில் இருந்து ரூ.53 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பிச்சென்றனா்.

இந்நிலையில் ஊழியா்கள் கடையைத் திறக்க திங்கள்கிழமை காலையில் வந்தபோது திருட்டு நடைபெற்றது தெரியவந்தது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இதேபோல் சில மாதங்களுக்கு முன் நாமக்கல்-சேலம் சாலையில் கைபேசி விற்பனை நிறுவனம் உள்பட 3 கடைகளில் ஷட்டரை உடைத்து ரூ.60 ஆயிரம் வரையில் மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT