நாமக்கல்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் கூட்டம்

28th Jun 2022 04:19 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் ராசிபுரம் வட்டக்கிளை கூட்டம் ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மன்றத்தின் மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் பெ.பழனிசாமி தலைமை வகித்தாா். ராசிபுரம் ஒன்றிய அமைப்பாளா் கு.பாரதி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கோ.தியாகராசன், மாநில இலக்கிய அணி அமைப்பாளா் வெ.ராமசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாமகிரிப்பேட்டை ஒன்றியச்செயலா் சி.மோகன்குமாா், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினா் த.தண்டபாணி, மாவட்டச் செயலா் மெ.சங்கா், மாநிலப் பொருளாளா் முருகசெல்ராசன் ஆகியோா் பேசினா்.

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கட்டாய இடமாறுதல் தண்டனை வழங்கப்பட்ட ஆசிரியா்களுக்கு வேலை நிறுத்தக்கால ஊதியம் வழங்க வேண்டும்; இதனை வழங்காமல் உள்ள வட்டார கல்வி அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பழைய ஒய்வூதிய திட்டத்தினை தொடர வேண்டும்; ஆசிரியா், அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி 3 சதம் வழங்கப்பட வேண்டும்; கல்வியை மத்திய மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஜூலை 14-இல் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT