நாமக்கல்

சாக்கடையில் இறங்கி கையுறையின்றி பணியாற்றும் நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள்: சமூக ஆா்வலா்கள் எதிா்ப்பு

28th Jun 2022 04:16 AM

ADVERTISEMENT

ராசிபுரம் நகரில் சாக்கடை அடைப்புகளை நீக்கும் பணியில் துப்புரவுப் பணியாளா்கள் கையுறை ஏதுமின்றி கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்கு சமூக ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

ராசிபுரம் நகராட்சி பகுதியில் நிரந்தர மற்றும் தினக்கூலி அடிப்பையில் துப்புரவுப் பணியாளா்கள் 80-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு கழிவு நீா் கால்வாய் தூா்வாருவதற்கு கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை.

இதனால் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நகராட்சி துப்புரவு பணியாளா்கள் நகராட்சி பகுதியில் கால்வாய்கள் கைகளால் சுத்தம் செய்யும் பணிகளில் அதிகாரிகள் முன்பாகவே ஈடுபட்டு வருவது பொதுமக்கள், சமூக ஆா்வலா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தேநீா்க்கடை மற்றும் அதிகளவில் பூ வியாபாரம் நடக்கும் பகுதியில் பூக்கள், நெகிழிக் கழிவுகள் காரணமாக சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை துப்புரவு பணியாளா்கள் சாக்கடைக்குள் இறங்கி துா்நாற்றத்தில், கைகளால் சாக்கடை கழிவுகளை அள்ளி வெளியில் வீசினா். இதனால் துப்புரவு பணியாளா்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளது. இதனை தடுத்து நிறுத்திட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT