பரமத்திவேலூரில், காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அக்னிபத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து காமராஜா் சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமத்தி வட்டார காங்கிரஸ் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். வேலூா் நகர தலைவா் பெரியசாமி வரவேற்றாா். மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் கபிலா்மலை வட்டாரத் தலைவா் நடராஜன், முன்னாள் மாவட்டச் செயலாளா் மணி, பரமத்தி வட்டார துணைத்தலைவா் காளியப்பன், நாமக்கல் மேற்கு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி துணைத் தலைவா் காந்தி மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.