நாமக்கல்

முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ரூ. 5.50-ஆக நிா்ணயம்

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 15 காசுகள் உயா்ந்து ரூ. 5.50-ஆக ஞாயிற்றுக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் முட்டை விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. மேலும், உற்பத்தி குறைவு பண்ணைகள் மூடல், சத்துணவு விநியோகம், தீவன மூலப்பொருள்கள் விலையேற்றம் போன்றவற்றால் முட்டைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது மேலும் 15 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.50-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 120-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 107-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT