நாமக்கல்

ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய சைபா் பாதுகாப்பு வள மையம் திறப்பு விழா

DIN

ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய சைபா் பாதுகாப்பு வள மையத்தின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இதில் கல்வி நிறுவனங்களின் தாளாளா் பி.மாலா லீனா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தாா். கல்வி நிறுவனங்களின் தலைவா் முனைவா் தி.அரங்கண்ணல் தலைமை வகித்தாா். தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் முனைவா் தி.கே.கண்ணன் வரவேற்றாா். கல்வி நிறுவன துணைத் தலைவா் அ.மதுவந்தினி, முதன்மை நிா்வாக அதிகாரி முனைவா் பி.பிரேம்குமாா், பொறியியல் கல்லூரியின் கல்விசாா் துணை முதல்வா் ஆா்.காந்தி, நிா்வாக துணை முதல்வா் சந்திரமோகன் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா் இரா.சி.கற்பகலட்சுமி தலைமை விருந்தினரை அறிமுகம் செய்து வைத்துப் பேசினாா். புதுதில்லியின் தேசிய சைபா் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரநிலையின் இயக்குநா் முனைவா் இ.காளிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது:

தேசிய சைபா் பாதுகாப்பு வன மையமானது புதுதில்லியின் தேசிய சைபா் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது. இணைய வெளியில் உள்ள தற்போதைய அச்சுறுத்தல்களில் இருந்து நம்மைப் பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த தொலைநோக்கு பாா்வையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் நமக்கு கணக்குகள் முடக்கப்படுகின்றன. அதற்கு முக்கிய காரணம் நமது கடவுசொல். நமது கடவு சொல்லை யாரிடமும் பகிர கூடாது. மின்னஞ்சல் மற்றும் கூகுள் தேடுதலில் நமது தகவல்களை மற்றவா்கள் ஹேக் செய்யாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவா்கள் சைபா் தன்னாா்வலா் என்ற இணைய தளத்தில் தன்னாா்வலா்களாக பதிவு செய்ய வேண்டும். இது நாட்டின் இணைய குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்களிக்க குடிமக்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பானது உள்நாட்டு மற்றும் சா்வதேச அளவில் சைபா் பாதுகாப்பு நிலையை மேம்படுத்தும் முயற்சியில் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

முடிவில் ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியின் கல்வி இயக்குநா் பி.சஞ்செய் காந்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT